December 12, 2024
தேசியம்
செய்திகள்

Nagorno-Karabakhக்கு கனடா $2.5 மில்லியன் மனிதாபிமான உதவி

Nagorno-Karabakh மனிதாபிமான நெருக்கடிக்கு 2.5 மில்லியன் டொலர் உதவியை கனடா அறிவித்துள்ளது

Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஏற்பட்ட நெருக்கடிக்கு கனடா 2.5 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை வழங்கியுள்ளது,

வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த நிதியுதவியை அறிவித்தது.

சுகாதார சேவைகள், உணவு போன்ற அவசர உதவிகளை வழங்க சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு இந்த நிதி வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Azerbaijanனின் இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து 120,000 மக்கள் தொகை கொண்ட Nagorno-Karabakh மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை அண்டை நாடான  Armeniaவிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.

Nagorno-Karabakh பிராந்தியத்தில் மனித உரிமைகளை மதிக்கப்படுவதை கனடா தொடர்ந்து வலியுறுத்துவதாக வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly  கூறினார்.

இந்த நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக கனடா இயங்கும் என அவர் தெரிவித்தார்.

Related posts

தெளிவான வெற்றியாளர் இல்லாமல் முடிவுக்கு வந்த BC தேர்தல்

Lankathas Pathmanathan

இஸ்ரேலில் இரண்டாவது கனடியர் பலி

Lankathas Pathmanathan

துப்பாக்கி நபர் Toronto காவல்துறையால் சுட்டுக் கொலை

Leave a Comment