தேசியம்
செய்திகள்

Manitoba வாகன விபத்தில் ஐவர் பலி

Manitoba மாகாணத்தின் Swan River அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் ஐவர் உயிரிழந்தனர்.

சனிக்கிழமை (30) பிற்பகல் 5 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து Swan River RCMP விசாரணை நடத்தி வருகிறது.

Saskatchewan மாகாண எல்லைக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்தது

ஐந்து பயணிகளுடன் ஒரு SUV வாகனம் பள்ளத்தில் வீழ்ந்திருந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்

வேகம் விபத்துக்கு ஒரு காரணியாக இருப்பதாகவும் விசாரணையாளர்கள் நம்புகின்றனர்.

42, 26 வயதுடைய இரண்டு பெண்களும், 37, 36, 25 வயதுடைய மூன்று ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பலியான ஐவரும் Swan River பகுதியை சேர்ந்தவர்கள் என RCMP அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

Pfizer தடுப்பூசியின் சேமிப்பு வெப்பநிலையில் மாற்றங்களை Health கனடா அறிவித்தது

Gaya Raja

பாலியல் வன்கொடுமை குற்றத்தை முன்னாள் Parti Québécois தலைவர் ஒப்புக் கொண்டார்

June மாத இறுதிக்குள் 10 மில்லியன் Pfizer தடுப்பூசிகளை கனடா பெற்றுக் கொள்ளும்

Lankathas Pathmanathan

Leave a Comment