December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடியர்களுக்கு விசா சேவைகளை நிறுத்திய இந்தியா!

கனடியர்களுக்கு விசா சேவைகளை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.

அதன் தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கவும் இந்தியா முடிவு செய்துள்ளது.

செயல்பாட்டுக் காரணங்களால், September 21 முதல் இந்திய விசா சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar  கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனடிய பிரதமர் குற்றம் சாட்டிய நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

கனடியர்களுக்கு அனைத்து விசா சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதை இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வியாழக்கிழமை (21)  உறுதிப்படுத்தினார்.

கனடாவில் உள்ள உயர் ஸ்தானிகராலயம், தூதரகங்கள் எதிர்நோக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அவற்றின் இயல்பான செயல்பாடு சீர்குலைத்துள்ளன என அவர் கூறினார்.

2021 ஆம் ஆண்டில், 80 ஆயிரம் கனேடிய சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இந்தியாவில் உள்ள அனைத்து துணைத் தூதரகங்களும் திறந்திருப்பதாகவும், அவை வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்வதாகவும் புது டில்லியில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகராலயம்  தெரிவித்துள்ளது.

Related posts

ரஷ்ய, பெலாரஷ் அரசாங்க ஆதரவாளர்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகள்

Lankathas Pathmanathan

இந்து ஆலயத்தில் நிகழ்ந்த தாக்குதல் குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் கண்டனம்

Lankathas Pathmanathan

பொது தேர்தலில் போட்டியிட விரும்பும் முன்னாள் Toronto நகரசபை உறுப்பினர்

Lankathas Pathmanathan

Leave a Comment