தேசியம்
செய்திகள்

புதிய கனடிய கடவுச்சீட்டுகள் சுருள்வதற்கு வாய்ப்புள்ளது?

புதிய கனடிய கடவுச்சீட்டுகள் சுருள்வதற்கு வாய்ப்புள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கனடாவில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கடவுச்சீட்டு தொடர்பில் பாவனையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

புதிய கடவுச்சீட்டை பயன்படுத்துபவர்கள் அவற்றின் அட்டைகள் சுருள்வதாக தெரிவிக்கின்றனர்.

புதிய கனடிய கடவுச்சீட்டுகள் வெப்பம், ஈரப்பதத்திற்கு உணர்திறன் கொண்டவை என கனடாவின் குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சின் – Immigration, Refugees and Citizenship Canada (IRCC) – செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த கடவுச்சீட்டுகள் தயாரிக்கப்பட்ட விதம் காரணமாக இந்த நிலை தோன்றலாம் என அவர் குறிப்பிட்டார்.

ஆனாலும் இது கடவுச்சீட்டின் செயல்பாடு, ஆயுள் ஆகியவற்றை பாதிக்காது என கூறப்பட்டுள்ளது.

முந்தைய கடவுச்சீட்டுகள் கூடுதல் பாதுகாப்பு கொண்டிருந்தன எனவும் அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

இருந்த போதிலும்  புதிய கடவுச்சீட்டுக்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்படாது என கூறப்பட்டுள்ளது.

இந்த மாதம் (August) 23ஆம் திகதி வரை, சுமார் 15,600 புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை கடவுச்சீட்டு அட்டை சுருட்டுவது தொடர்பாக மூன்று அதிகாரப்பூர்வ புகார்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன என IRCC தெரிவித்துள்ளது.

Related posts

Ontario பெரும்பாலான பொது இடங்களில் முகமூடி கட்டுப்பாடுகளை விலத்தியது

Lankathas Pathmanathan

Atlantic பகுதி முழுவதும் சூறாவளி எச்சரிக்கை

Lankathas Pathmanathan

COVID எதிர்காலத்தில் சவால்களை உருவாக்கும் என்பதை Omicron மாறுபாடு காட்டுகிறது: Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment