December 12, 2024
தேசியம்
செய்திகள்

இரண்டு தொகுதி இடைத் தேர்தலில் Liberal வெற்றி

Ontario மாகாணத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் Liberal கட்சி வெற்றி பெற்றது.

Torontoவில் Scarborough – Guildwood தொகுதியிலும், Ottawaவில் Kanata- Carleton தொகுதியிலும் இந்த இடைத் தேர்தல் வாக்களிப்பு வியாழனன்று நடைபெற்றது.

Scarborough – Guildwood தொகுதியில் Liberal வேட்பாளர் Andrea Hazell, Kanata-Carleton தொகுதியில் Liberal வேட்பாளர் Karen McCrimmon ஆகியோர் இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

இந்த தேர்தலில் Scarborough – Guildwood தொகுதியில் NDP சார்பில் தமிழ் வேட்பாளரான தட்ஷா நவநீதன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ontario தேர்தல் திணைக்களத்தின் தரவுகளின்படி, Scarborough-Guildwood தொகுதியில் தகுதியான வாக்காளர்களில் 21.8 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்தனர்.

Kanata-Carleton தொகுதியில் தகுதியான வாக்காளர்களில் 35 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்தனர்.

இந்த இரண்டு தொகுதியிலும் இரண்டாவது இடத்தில் Conservative கட்சியும், NDP மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

Scarborough—Guildwood Election Night Results (unofficial)

ANDREA AZELL, Ontario Liberal Party 5,640 votes
GARY CRAWFORD, PC Party of Ontario 4,562 votes
THADSHA NAVANEETHAN, Ontario NDP 4,041 votes

 

Kanata—Carleton Election Night Results (unofficial)

KAREN MCCRIMMON, Ontario Liberal Party 11,066
SEAN WEBSTER, PC Party of Ontario 10,415
MELISSA COENRAAD, Ontario NDP 9,560

 

Scarborough-Guildwood தொகுதி, 2007ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட காலம் முதல் Liberal கட்சியினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.

Kanata-Carleton தொகுதி கடந்த March மாதம் முதல் வெற்றிடமாக இருந்தது.

அந்த தொகுதியில் மாகாணசபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த Merrilee Fullerton திடீரென தனது பதவியில் இருந்து விலகியிருந்தார்.

Toronto நகர முதல்வர் இடை தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது Scarborough-Guildwood தொகுதி மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து Mitzie Hunter விலகியிருந்தார்.

Related posts

மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் April அதிகரிப்பு

Lankathas Pathmanathan

1973ஆம் ஆண்டின் பின்னர் 2020இல் மிகக் குறைந்த விவாகரத்துகள் கனடாவில் பதிவு

தலைநகர் போராட்டம் முற்றுகையாக மாறியுள்ளது: Ottawa நகர முதல்வர்

Lankathas Pathmanathan

Leave a Comment