December 12, 2024
தேசியம்
செய்திகள்

காட்டுத் தீயினால் ஏற்படும் மரணங்களை தடுக்க நடவடிக்கைகள்

காட்டுத் தீயினால் ஏற்படும் மரணங்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் Steven Guilbeault கூறினார்.

2021 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசாங்கம் காட்டுத்தீ மேலாண்மை திட்டத்திற்கு 65 மில்லியன் டொலருக்கு அதிகமாக செலவிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்

கடந்த வாரம் காட்டுத் தீயினால் மூவர் பலியாகினர்.

British Columbiaவில் காட்டுத்தீ புகையால் கடுமையான asthma காரணமாக 9 வயது சிறுவன் மரணமடைந்த சம்பவம் கடந்த வாரம் நிகழ்ந்தது.

Northwest பிரதேசங்கள், British Columbiaவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கனேடிய தீயணைப்பு படை உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.

புதன்கிழமை (19) Albertaவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் அதன் விமானி மரணமடைந்தார்.

நாடளாவிய ரீதியில் தற்போது 885 க்கும் மேற்பட்ட காட்டுத் தீ எரிந்து வருகிறது.

இவற்றில் 600 கட்டுப்பாட்டில் இல்லை என அமைச்சர் Steven Guilbeault கூறினார்.

இந்த வருடம் காட்டுத்தீ கனடிய வரலாற்றில் மிக மோசமானதாக அமைந்துள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 110,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை காட்டுத்தீ எரித்துள்ளது.

Related posts

மற்றுமொரு வட்டி விகித குறைப்பை அறிவித்த மத்திய வங்கி

Lankathas Pathmanathan

பொது சுகாதார உத்தரவுகளை முடிவுக்கு கொண்டுவர Saskatchewan முடிவு

Lankathas Pathmanathan

கனடிய வீட்டின் சராசரி விலை 20 சதவீதம் குறைவு

Lankathas Pathmanathan

Leave a Comment