தேசியம்
செய்திகள்

22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்த மத்திய வங்கியின் வட்டி விகிதம்

22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனடிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.

மத்திய வங்கி மீண்டும் ஒரு வட்டி விகித அதிகரிப்பை புதன்கிழமை (12) அறிவித்தது.

March 2022 முதல் 10வது முறையாக வட்டி விகிதத்தை புதனன்று மத்திய வங்கி அதிகரித்தது.

அறிவிக்கப்பட்ட 25 அடிப்படை புள்ளிகள் உயர்வு, வட்டி விகிதத்தை 5 சதவீதமாக அதிகரிக்கிறது.

இதன் மூலம் 2001ஆம் ஆண்டுக்கு பின்னர் வட்டி விகிதம் அதிக அளவில் உள்ளது.

பொருளாதார வளர்ச்சியை குறைக்கவும், முக்கிய பணவீக்கத்தை குறைக்கவும் இந்த வட்டி விகித அதிகரிப்பு அவசியமாகிறது என மத்திய வங்கி தெரிவித்தது.

மூன்று மாத அடிப்படை பணவீக்க விகிதம் September 2022 முதல் வங்கியின் எதிர்பார்ப்பை விட 3.5 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை அதிகமாக உள்ளது.

கனடிய மத்திய வங்கி அதன் அடுத்த வட்டி விகித முடிவை எதிர்வரும் September 6ஆம் திகதி அறிவிக்கிறது.

Related posts

மீண்டும் முதல்வரானார் Doug Ford

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கான புதிய கனடிய தூதர் நியமனம்

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: ஒன்பதாவது தங்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment