தேசியம்
செய்திகள்

Latviaவில் இராணுவ பிரசன்னத்தை கனடிய அரசாங்கம் இரட்டிப்பாக்கும்

கனடிய அரசாங்கம் Latviaவில் இராணுவ பிரசன்னத்தை இரட்டிப்பாக்கும் என பிரதமர் தெரிவித்தார்.

Latviaவில் NATO பணிக்கு கனடாவின் பங்களிப்பை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என Justin Trudeau உறுதியளித்துள்ளார்.

Latvia பிரதமரை திங்கட்கிழமை (10) கனடிய பிரதமர் சந்தித்தார்.

இன்றைய அறிவித்தலின் மூலம் மூன்று ஆண்டுகளில் 2.6 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்படுவதுடன், 2,200 கனடிய துருப்புக்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

சுமார் 800 கனடிய ஆயுதப்படை உறுப்பினர்கள் ஏற்கனவே Latviaவில் கனடா தலைமையிலான போர்க் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இது கனடாவின் மிகப்பெரிய வெளிநாட்டு பணியாக மாற்றப்பட்டுள்ளது.

Related posts

கனடா சிவில் உரிமை மீறல்களின் சின்னமாக மாறியுள்ளது என குற்றச்சாட்டு

Nova Scotia வெள்ளத்தில் காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

Lankathas Pathmanathan

Ontario மாகாண சபை உறுப்பினர்களில் ஐந்தில் ஒருவர் வாடகை வருமானம் பெற்றுள்ளனர்

Lankathas Pathmanathan

Leave a Comment