தேசியம்
செய்திகள்

Scarborough – Guildwood தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் பெண் வேட்பாளர்

Scarborough – Guildwood தொகுதியில் நடைபெறவுள்ள Ontario மாகாண சபை உறுப்பினர் தெரிவுக்கான இடைத்தேர்தலில் தட்ஷா நவநீதன் போட்டியிடுகின்றார்.

இந்த தொகுதிக்கான இடைதேர்தல் July மாதம் 27ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இந்த இடைத்தேர்தலில் Ontario மாகாண புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தட்ஷா நவநீதன் அறிவிக்கப்பட்டார்.

Scarborough – Guildwood தொகுதியில் எங்கள் வேட்பாளராக தட்ஷா நவநீதனை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என Ontario NDP தலைவர் Marit Stiles தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (30) காலை இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது.

சனிக்கிழமை (01) நடைபெறும் வேட்பு மனு கூட்டத்தில் Scarborough – Guildwood தொகுதி கட்சி உறுப்பினர்களால் இந்த நியமனம் உறுதி செய்யப்படும் என NDP கட்சி தெரிவித்தது.

Related posts

தமிழர் மீது கூடுதல் சிறுவர் பாலியல் குற்றச்சாட்டுகள்

Lankathas Pathmanathan

Maritimes மாகாணங்களில் ஆயிரக் கணக்கானோருக்கு மின்சாரம் துண்டிப்பு

Lankathas Pathmanathan

ஐந்து முதல் பதினொரு வயதுடைய குழந்தைகளுக்கு Health கனடா Pfizer booster தடுப்பூசியை அங்கீகரித்தது

Lankathas Pathmanathan

Leave a Comment