கனேடிய செய்திகளை அதன் தளங்களில் இருந்து நீக்குவதாக Google வியாழக்கிழமை (29) தெரிவித்துள்ளது.
இதன் மூலம் உள்ளூர் வெளியீட்டாளர்களுடன் ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களை முடிக்க Google முடிவு செய்துள்ளது.
Liberal அரசாங்கத்தின் இணைய செய்தி சட்டம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் நிறுவனங்கள் பகிரும் அல்லது மறு பயன்படுத்தும் செய்திகளுக்கு ஊடகங்களுக்கு பணம் செலுத்த கட்டாயப்படுத்துகிறது.
இந்த நிலையில் கனேடிய வெளியீட்டாளர்கள், வாசகர்களுக்காக மட்டுமே செய்தி இணைப்புகளை அகற்ற Google திட்டமிட்டுள்ளது.
தமது இந்த முடிவு குறித்து கனேடிய பாரம்பரிய அமைச்சருக்கு வியாழன் காலை கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக Google உலகளாவிய விவகாரங்கள் தலைவர் கூறினார்.
Google நிறுவனத்தின் இந்த முடிவு குறித்து ஆச்சரியமடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த மாற்றங்கள் எப்போது நிகழும் என்பதை Google தெரிவிக்கவில்லை.
ஆனால் அரசாங்கத்தின் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் இந்த மாற்றங்கள் நிகழும் என Google கூறியது.
கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டு கனடிய அரசாங்கத்தின் இந்தச் சட்டம், இந்த ஆண்டு இறுதிக்குள் அமுலுக்கு வருகிறது.