தேசியம்
செய்திகள்

கனடாவின் மிகப்பெரிய Pride ஊர்வலம் Torontoவில்

கனடாவின் மிகப்பெரிய Pride ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை (25) Torontoவில் நடைபெற்றது.

வெறுப்பு, சகிப்பின்மை ஆகியவற்றை அதிகரித்த அளவில் எதிர்கொண்டு வரும் ஒரு சமூகத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில் இம்முறை Pride ஊர்வலம் நடைபெற்றது.

இம்முறை Pride ஊர்வலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலத்தில் சில முக்கிய அரசியல்வாதிகளும் இம்முறை கலந்து கொண்டனர்.

இவர்களில் துணை பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland,NDP தலைவர் Jagmeet Singh, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கரி அனந்தசங்கரி, உட்பட Toronto நகர முதல்வர் வேட்பாளர்கள் சிலரும் அடங்குகின்றனர்.

இம்முறை Pride ஊர்வலத்தின் போது எதிர்ப்பு போராட்டங்கள் சிலவும் முன்னெடுக்கப்பட்டன.

2020 முதல் 2021 க்கு இடையில் கனடாவில் பாலியல் நோக்கு நிலையின் அடிப்படையிலான வெறுப்பு குற்றங்கள் 65 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

Related posts

Ontario, NDP தலைமை பதவிக்கு முதல் வேட்பாளர்!

Lankathas Pathmanathan

Monkeypox: பாதிக்கப்படக்கூடிய ஆபத்தில் உள்ளவர்களை தடுப்பூசி பெறவேண்டியது அவசியம்!

Lankathas Pathmanathan

Ontarioவில் கடந்த வருடம் 100,000 டொலர்களுக்கு அதிகமான ஊதியம் பெற்றவர்களின் பட்டியல் வெளியானது!

Lankathas Pathmanathan

Leave a Comment