தேசியம்
செய்திகள்

காட்டுத்தீயை கட்டுப்படுத்த கனடாவுக்கு அமெரிக்கா உதவி

கனடா முழுவதும் பரவும் காட்டுத்தீயை விரைவாக கட்டுப்படுத்த அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி Joe Biden தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

அதிகரித்து வரும் காட்டுத்தீ நிலைமை குறித்து பிரதமர் Justin Trudeauவுடன் உரையாடிய பின்னர் Joe Biden இந்த உத்தரவை பிறப்பித்ததாக வெள்ளை மாளிகை கூறியது.

அமெரிக்க ஜனாதிபதி கனடாவுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக இந்த உரையாடலின்போது உறுதியளித்தார்.

பேரழிவு தரும் காட்டுத்தீயை தொடர்ந்து எதிர்கொள்ள கனடா போராடி வரும் நிலையில், அமெரிக்கர்கள் வழங்கும் அனைத்து உதவிகளுக்கும் பிரதமர் Justin Trudeau நன்றி தெரிவித்தார்.

Related posts

அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிட Ontario முடிவு

மத்திய அரசாங்கத்துடன் சுகாதார பாதுகாப்பு நிதியுதவி தொடர்பாக British Columbia உடன்பாடு

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வராக July 12 பதவி ஏற்கும் Olivia Chow

Lankathas Pathmanathan

Leave a Comment