தேசியம்
செய்திகள்

முதல் காலாண்டில் கனேடியப் பொருளாதாரம் 3.1 சதவீதம் வளர்ச்சி

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கனேடியப் பொருளாதாரம் 3.1 சதவீத வருடாந்திர வீதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.

கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் புதன்கிழமை (31) இந்த தகவலை வெளியிட்டது.

இந்த தகவல் வெளியீடு, மத்திய அரசின் எதிர்வு கூறலான 2.5 சதவீத வளர்ச்சியை முறியடித்துள்ளது.

March மாதத்தில் சீராக இருந்த பொருளாதாரம், April மாதத்தில் 0.2 சதவிகிதம் வளர்ச்சியடைந்ததாக ஒரு ஆரம்ப மதிப்பீடு தெரிவிக்கிறது.

பொருளாதாரத்தின் பின்னடைவு சாத்தியமான வட்டி விகித உயர்வு குறித்த விவாதங்களை ஆரம்பிக்கிறது.

கனடிய மத்திய வங்கி அதன் அடுத்த வட்டி விகித அறிவிப்பை அடுத்த வாரம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

குழந்தைகளுக்கான COVID தடுப்பூசியின் முதல் தொகுதி கனடாவை வந்தடைந்தது!

Lankathas Pathmanathan

ஐ நா.வின் 46/1 தீர்மானம் ; கனடியத் தமிழர் பேரவை (CTC) வெளியிட்ட அறிக்கை!

Gaya Raja

Moroccoவின் விமானங்களை கனடா நிறுத்துகிறது!

Gaya Raja

Leave a Comment