தேசியம்
செய்திகள்

Conservative தலைவருக்கு எதிராக தவறான செய்திகளை பரப்பும் நகர்வு?

கட்சித் தலைவராக இருந்தபோது சீனத் தலையீட்டின் இலக்காக தான் இருந்தது குறித்து கனடிய உளவு நிறுவனம் தன்னிடம் தகவல் பகிர்ந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் Erin O’Toole தெரிவித்தார்.

தன்னை இழிவுபடுத்தும் நோக்கில் இந்த தலையீடு அமைந்ததாக முன்னாள் Conservative தலைவர் கூறினார்.

கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையுடன் தனது சந்திப்பில் தனக்கு எதிரான நடவடிக்கைகள் பலவற்றை அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக 2021 பொதுத் தேர்தல் காலத்தில் தனது கொள்கைகள் குறித்து தவறான செய்திகளை பரப்பும் நகர்வு முன்னெடுக்கப்பட்டதாக Erin O’Toole கூறினார்.

தனக்கும் தனது தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து அரசாங்கம் அல்லது பாதுகாப்பு நிறுவனங்கள் தமக்கு எச்சரிக்கவில்லை எனவும் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.

Liberal அரசாங்கத்தின் செயலற்ற தன்மை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் தனது சிறப்புரிமைகளை மீறுவதாக அமைந்தன எனவும் Erin O’Toole கூறினார்.

Related posts

பிரதமரும் துணைவியாரும் தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்

Gaya Raja

ரஷ்யாவுக்கு எதிரான போர் மிக முக்கியமான கட்டத்தில் உள்ளது: கனடாவுக்கான உக்ரைன் தூதுவர்

Lankathas Pathmanathan

தைவான் நிலநடுக்கத்தில் இரண்டு கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment