தேசியம்
செய்திகள்

சவூதி அரேபியாவுடன் மீண்டும் இராஜதந்திர உறவுகளை ஆரம்பிக்கும் கனடா

சவூதி அரேபியாவுடன் முழு இராஜதந்திர உறவுகளை கனடா மீட்டெடுக்கின்றது.

சவூதி அரேபியாவுடனான முழு இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க முடிவு செய்துள்ளதாக கனடிய அரசாங்கம் புதன்கிழமை (24) அறிவித்தது.

இதன் முதல் கட்ட நடவடிக்கையாக கனடாவும், சவுதி அரேபியாவும் புதிய தூதர்களை நியமித்துள்ளது.

இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான ஐந்தாண்டு இடைவெளி முடிவுக்கு வருகிறது.

கடந்த வருடம் November மாதம் Bangkokகில் நடந்த ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் Justin Trudeau சவுதி இளவரசர் Mohammed Bin Salman னை சந்தித்தார்.

இந்த சந்திப்பை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மீட்டெடுக்கப்படுகின்றன.

துபாயில் கனடாவின் தூதரக அதிகாரியாக இருந்த Jean-Philippe Linteau சவுதி அரேபியாவுக்கான தூதராக பணியாற்றுவார் என புதனன்று கனடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்தது.

Related posts

New Brunswick கல்வி அமைச்சர் பதவி விலகல்!

Lankathas Pathmanathan

இஸ்ரேல்-காசா போரில் ஏழு கனடியர்கள் மரணம்

Lankathas Pathmanathan

பொது சேவை கூட்டணி சமரசத்திற்கு தயாராக வேண்டும்!

Lankathas Pathmanathan

Leave a Comment