தேசியம்
செய்திகள்

ரஷ்யா மீது மேலும் தடைகளை அறிவித்த கனடா

ரஷ்யா மீது மேலும் தடைகளை பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை (19) அறிவித்தார்.

ஜப்பானின் வெள்ளியன்று ஆரம்பமான G7 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கின்றார்.

அங்கு செய்தியாளர்களுடன் பேசிய Justin Trudeau, உக்ரைன் மீது சட்டவிரோத இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் ரஷ்யா மீது மேலும் 70 தடைகள் விதிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கனடா உக்ரைனுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை LGBT உரிமைகளின் அடிப்படையில் இத்தாலி எடுக்கும் சில நிலைப்பாடுகள் குறித்து கவலை கொண்டுள்ளதாகவும் Justin Trudeau தெரிவித்தார்.

G7 மாநாட்டில் கலந்து கொள்ளும் இத்தாலிய பிரதமர் Giorgia Meloniயை வெள்ளியன்று Justin Trudeau சந்தித்தார்.

இந்த உரையாடலின் போது LGBT உரிமைகளின் அடிப்படையில் இத்தாலியின் சில நிலைப்பாட்டுக்கு கனடாவின் கண்டனத்தை பிரதமர் வெளியிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை (21) வரை ஜப்பானின் தங்கியிருக்க உள்ள Justin Trudeau அங்கு மேலும் பல G7 நாடுகளின் தலைவர்களை சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.

Related posts

Maritimes மாகாணங்களில் 100,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் இல்லை

Lankathas Pathmanathan

Toronto வீடு விற்பனையில் சரிவு

Lankathas Pathmanathan

மீண்டும் மன்னிப்புக் கோரினார் திருத்தந்தை பிரான்சிஸ்

Lankathas Pathmanathan

Leave a Comment