தேசியம்
செய்திகள்

கனடிய ஆயுதப் படையினரை Albertaவில் சந்தித்த பிரதமர்

Alberta மாகாணத்தில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கனடிய ஆயுதப் படையினரை திங்கட்கிழமை (15) பிரதமர் Justin Trudeau சந்தித்தார்.

Alberta மாகாணத்திற்கு திங்களன்று பிரதமர் பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

அங்கு காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆயுதப் படையினரை பிரதமர் சந்தித்தார்.

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதற்கு சுமார் 300 இராணுவத்தினர் Albertaவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த காட்டுத் தீயின் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி Albertaவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனேடிய நாடாளுமன்றத்தின் இனப்படுகொலை தொடர்பான பிரேரணையை நிராகரிக்கும் இலங்கை

ஈரானிய ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் கனடாவுக்குள் நுழைய தடை

Lankathas Pathmanathan

B.C உலங்கு வானூர்தி விபத்தில் விமானி பலி

Lankathas Pathmanathan

Leave a Comment