தேசியம்
செய்திகள்

கனேடிய தூதர் சீனாவில் இருந்து வெளியேற்றம்

கனேடிய தூதர் சீனாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

Shanghaiயில் உள்ள கனடாவின் துணைத் தூதரகத்தின் தூதரான Jennifer Lynn Lalonde சீனாவினால் செவ்வாய்க்கிழமை (09) வெளியேற்றப்பட்டார்.

எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னதாக அவர் சீனாவில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

கனடிய அரசாங்கம் சீன தூதர் Zhao Weiயை வெளியேற்ற திங்கட்கிழமை (08) முடிவு செய்தது.

கனடிய அரசாங்கத்தின் இந்த நகர்வுக்கு பதிலளிக்கும் வகையில் செவ்வாயன்று கனேடிய தூதர் சீனாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதேவேளை கனடிய அரசாங்கம் சீன தூதரை வெளியேற்றும் முடிவை, Ottawaவில் உள்ள சீன தூதரகம் கண்டித்துள்ளது.

கனடா சர்வதேச சட்டத்தை மீறுவதாக கூறியுள்ள சீன தூதரகம், சீன எதிர்ப்பு உணர்வின் அடிப்படையில் கனடா செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியது.

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Michael Chong, Hong Kongகில் உள்ள அவரது உறவினர்களை மிரட்டும் சதியில் ஈடுபட்டதாக Torontoவை தளமாகக் கொண்ட சீன தூதர் Zhao Wei மீது கனடாவின் உளவுத்துறை குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

தொற்றின் இரண்டாம் ஆண்டில் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரிப்பு

Lankathas Pathmanathan

COVID மரணங்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மிக்கிறது

Lankathas Pathmanathan

மத்திய அரசின் அனைத்து சாதனங்களில் இருந்து TikTok செயலி தடை

Lankathas Pathmanathan

Leave a Comment