தேசியம்
செய்திகள்

சீன இராஜதந்திரி கனடிய அரசாங்கத்தால் வெளியேற்றம்

கனடிய அரசாங்கம் சீன தூதரை வெளியேற்றுகிறது.

சீன தூதர் Zhao Weiயை வெளியேற்ற Liberal அரசாங்கம் திங்கட்கிழமை (08) முடிவு செய்துள்ளது.

Torontoவை தளமாகக் கொண்ட அவரது வெளியேற்ற முடிவை வெளியுறவு அமைச்சர் Melanie Joly வெளியிட்டார்.

எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் எந்தவொரு வெளிநாட்டு தலையீட்டையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என தனது முடிவு குறித்து Melanie Joly குறிப்பிட்டார்.

கனடாவில் உள்ள இராஜதந்திரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இவரது வெளியேற்றம் குறித்து Ottawaவில் உள்ள சீன தூதரகத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

Zhao Wei கனடாவை விட்டு வெளியேற ஐந்து நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Michael Chong, Hong Kongகில் உள்ள அவரது உறவினர்களை மிரட்டும் சதியில் இவர் ஈடுபட்டதாக கனடாவின் உளவுத்துறை குற்றம் சாட்டியிருந்தது.

வெளிநாட்டு தலையீடுகள் குறித்து அரசாங்கம் பொது விசாரணைக்கு அழைப்பு விடுக்க கோரும் பிரேரணைக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில் அரசாங்கத்தின் இந்த முடிவு வெளியானது.

Related posts

கனடிய தமிழர் மீதான தாக்குதலை கண்டிக்கும் கனடா ஸ்ரீ ஐயப்பன் சமாஜம்

அதிகரித்து வரும் தொற்றால் அழுத்தத்தை எதிர்கொள்ளும் மருத்துவமனைகள்

Lankathas Pathmanathan

ஒரு மில்லியன் டொலர்களுக்கு அதிகமான திருடப்பட்ட பொருட்களை மீட்ட Toronto காவல்துறை

Lankathas Pathmanathan

Leave a Comment