தேசியம்
செய்திகள்

சூதாட்ட விடுதிகளில் $4 மில்லியன் பண மோசடி செய்த தமிழர்?

பண மோசடி செய்பவராக சந்தேகிக்கப்படும் தமிழர், Toronto பெரும்பாகத்தில் பல சூதாட்ட விடுதிகளில் 4  மில்லியன் டொலர்களை பரிவர்த்தனை செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரணவன் கணபதிப்பிள்ளை என்ற தமிழர் மீது இந்த சந்தேகம் எழுந்துள்ளது.

அவர் Ontario மாகாண சூதாட்ட விடுதிகளில் 4 மில்லியன் டொலர்கள் பண மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாக, அவரது பெரும் தொகையான பரிவர்த்தனை பல்வேறு சூதாட்ட விடுதிகளில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Niagara Fallsview சூதாட்ட விடுதியில் கடந்த இலையுதிர்காலத்தில்  அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்திற்கு உரிமை கோருவதற்கு அவர் கடந்த வாரம் நீதிமன்றத்தில் முன்னிலை ஆகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில்  பிரணவன் கணபதிப்பிள்ளை  நாட்டை விட்டு தப்பி சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விடயத்தில் பிரணவன் கணபதிப்பிள்ளை மீது குற்றச்சாட்டுக்கள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உக்ரைனுக்கு 9 மில்லியன் டொலர் இராணுவ உதவியை கனடா வழங்கியது

Lankathas Pathmanathan

கனடாவில் 300 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள்

Lankathas Pathmanathan

வெள்ளிக்கிழமை எரிபொருளின் விலை மூன்று சதம் சரியும்

Lankathas Pathmanathan

Leave a Comment