தேசியம்
செய்திகள்

சூடானில் இருந்து கனடியர்களை வெளியேற்றவுள்ள இராணுவத்தினர்?

சூடானில் இருந்து கனடியர்களை வெளியேற்றும் நகர்வொன்றை கனடா மேற்கொள்வதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.

இரண்டாவது வாரமாக சூடானில் வன்முறைகள் தொடரும் நிலையில் செவ்வாய்க்கிழமை (25) பிரதமர் இந்த தகவலை வெளியிட்டார்.

சூடானில் இருந்து கனேடியர்களை வெளியேற்ற மத்திய அரசு அதன் நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்த நகர்வுகளை மேற்கொள்வதாக Justin Trudeau கூறினார்.

சூடானில் இருந்து வெளியேற்றப்படும் கனடியர்களை அழைத்து வருவதற்காக அந்த பகுதியில் இரண்டு கப்பல்கள் தயாராக உள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

கிழக்கு ஆபிரிக்க பிரதியத்திற்கு கனடாவின் ஆதரவை வழங்குவதற்காக ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவருடன் பேசியதாகவும் Justin Trudeau கூறினார்.

அதேவேளை சூடானில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்ற கனேடிய இராணுவத்தை உபயோகிப்பது குறித்து அரசாசங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

New Brunswick மாகாண பாலியல் நோக்குநிலை கொள்கை மாற்றத்தை விமர்சித்த மத்திய அமைச்சர்

Lankathas Pathmanathan

Albertaவில் மிக அதிகமாக பரவி வரும் கொரோனா தொற்று!

Gaya Raja

2026 முதல் மின்சார வாகன விற்பனையை கட்டாயமாக்கும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment