தேசியம்
செய்திகள்

பொதுச் சேவை ஊழியர் வேலை நிறுத்தம் காரணமாக மூடப்படும் முதற்குடியினர் பாடசாலைகள்

தொடரும் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் காரணமாக Ontario மாகாண முதற்குடியினர் சமூகத்தில் மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

முதற்குடியினர் சமூகத்தின் மொத்தம் ஆறு பாடசாலைகள் இந்த வேலை நிறுத்தம் காரணமாக மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 1,500 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக பெரும் சேவை இடையூறுகள் ஏற்படும் என தொழிற்சங்கமும் அரசாங்கமும் ஏற்கனவே எச்சரித்தன.

மத்திய அரசின் மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தம் வெள்ளிக்கிழமை (21) மூன்றாவது நாளாக தொடர்ந்தது.

Related posts

Liberal நாடாளுமன்ற குழுவின் பெரும்பான்மையானவர்கள் பிரதமரை ஆதரிக்கின்றனர்?

Lankathas Pathmanathan

Albertaவில் பொது சுகாதார அவசர நிலை அறிவிப்பு!

Gaya Raja

கனடிய செய்திகள் – October மாதம் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment