தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் வரி காலக் கெடுவை நீட்டிக்க திட்டம் எதுவும் இல்லை என CRA தெரிவித்துள்ளது.
கனடா வருவாய் முகமை ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
இதன் மூலம் கனடிய வரலாற்றில் மிகப்பெரிய வேலை நிறுத்தத்திற்கான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
ஆனாலும் வரி தாக்கல் காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை என CRA பேச்சாளர் தெரிவித்தார்.
சாத்தியமான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் கனடியர்கள் தங்கள் வரிகளை தாக்கல் செய்யும் திறனை எந்த வகையிலும் தடுக்காது எனவும் அவர் கூறினார்.
ஆனாலும் வேலை நிறுத்தம் ஒன்று முன்னெடுக்கப்பட்டால் தமது சேவைகளில் செயலாக்க தாமதங்கள் எதிர்கொள்ளப்படலாம் என CRA தெரிவித்தது.