February 23, 2025
தேசியம்
செய்திகள்

சீனாவின் தேர்தல் குறுக்கீடு திட்டம் குறித்து பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது?

கனடிய தேர்தலில் சீனாவின் தேர்தல் குறுக்கீடு திட்டம் குறித்து 2022இல் பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது சாத்தியம் என பிரதமரின் தலைமை அதிகாரி தெரிவித்தார்.

பிரதமர் Justin Trudeauவின் தலைமை அதிகாரி Katie Telford வெள்ளிக்கிழமை (14) நாடாளுமன்றக் குழுவின் முன்னர் சாட்சியம் அளித்தார்.

January 2022 காலகட்டத்தில் வெளிநாட்டு தலையீடு குறித்த விவாதங்கள் மிகவும் சாத்தியமானவை என இந்த விசாரணையில் அவர் கூறினார்.

கனடாவின் கடந்த இரண்டு தேர்தல்களில் சீன அரசாங்கத்தின் தலையீட்டின் அளவு குறித்து அவர் சாட்சியம் அளித்தார்.

2019, 2021 பொதுத் தேர்தல்களில் சீனா தலையீடு முயற்சிகள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து Katie Telford தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு தேர்தல்களில் சீன அரசாங்கம் தலையிட முயற்சித்தது குறித்து Liberal கட்சிக்கு தெரிந்த விபரங்கள் தொடர்பான சமீபத்திய குற்றச்சாட்டுகளை அவரது அலுவலகம் அவதானித்து வருவதாக பிரதமரின் தலைமை அதிகாரி குறிப்பிட்டார்.

ஆனாலும் தகவல் சட்டத்தின் பாதுகாப்பு காரணமாக, பகிரங்கமாக இந்த விடயங்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என அவர் கூறினார்.

முக்கியமான உளவுத்துறை விடயங்கள் குறித்து Katie Telford பொது வெளியில் என்ன விபரங்களை பகிர முடியும் என்பதில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளதாக பிரதமர் அலுவலகம் ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Cantaloupe salmonella பாதிப்பில் ஒருவர் பலி!

Lankathas Pathmanathan

Trudeau மீது சரளைக் கல் வீச்சு – ஒருவர் காவல்துறையினரால் கைது

Gaya Raja

B.C. வங்கி கொள்ளை முயற்சியில் மூன்றாவது சந்தேக நபர்?

Lankathas Pathmanathan

Leave a Comment