தேசியம்
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கனடியத் தமிழர்கள் நன்கொடை

கனடியத் தமிழர்கள் பத்து மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான மருந்துப் பொருட்களை இலங்கை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு கனடியத் தமிழர் பேரவை நடத்திய நிதி சேர் நடை பவனி ஊடக திரட்டப்பட்ட நிதியில் இருந்து இந்த நன்கொடை புதன்கிழமை (12) வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இயக்குனர் மருத்துவர் கலாரஞ்சனி கணேசலிங்கம் இந்த மருந்துப் பொருட்களை பெற்றுக் கொண்டார்.

இந்த நிதிசேர் நடையூடாக சேகரிக்கப்பட்ட நன்கொடை மூலம் இலங்கையில் வடக்கு, கிழக்கு, மத்தி, தெற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள ஆறு மருத்துவமனைகளுக்கு மருந்துப் பொருட்கள் வழங்குவதெனத் திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு முதலாவது நன்கொடைத் தொகுதி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டது.

புதன்கிழமை இரண்டாவது தொகுதி மருந்துகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது

Related posts

Liberal கட்சியுடன் தொடர்ந்து செயல்படவுள்ள Anthony Housefather

Lankathas Pathmanathan

Floridaவில் தொடர் மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு கனேடியர்கள் பலி!

Gaya Raja

கடுமையான வெப்ப நிலை கொண்ட கோடை காலம்

Leave a Comment