தேசியம்
செய்திகள்

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மளிகை தள்ளுபடி திட்டம்

குறைந்த வருமானம் கொண்ட கனேடியர்களுக்கு மத்திய அரசாங்கம் மளிகை தள்ளுபடி திட்டமொன்றை அறிமுகப்படுத்துகிறது

இந்த புதிய நடவடிக்கை குறைந்த வருமானம் கொண்ட 11 மில்லியன் கனேடியர்களுக்கு உதவும் என கூறப்படுகிறது.

இதற்காக செவ்வாய்க்கிழமை (28) சமர்ப்பிக்கப்பட்ட 2023 வரவு செலவு திட்டத்தில் 2.5 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய Liberal அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland செவ்வாய்க்கிழமை பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

தவிரவும் முன்னர் சுகாதாரப் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டதை விட 46.2 பில்லியன் டொலர்கள் அதிகமாகச் செலவழிக்க மத்திய அரசின் உறுதிமொழியும் இந்த வரவு செலவு திட்டத்தில் அடங்குகிறது.

மத்திய அரசாங்கம் மாகாண, பிராந்திய அரசாங்கங்களுடன் செய்து கொண்ட சுகாதார ஒப்பந்தங்களுக்கு இந்த நிதி ஒதுக்கிப்படுகிறது.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

இராணுவத்தினரின் உதவியுடன் மூடப்படவுள்ள ஆப்கானிஸ்தான் கனேடிய தூதரகம்!

Gaya Raja

அதிகமானவர்கள் தடுப்பூசி பெற்ற நாடுகளில் கனடாவுக்கு முதலிடம்!

Gaya Raja

Leave a Comment