கனடாவின் நிதி நிறுவனங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நிதி அமைச்சர் Chrystia Freeland கனேடியர்களுக்கு உறுதியளிக்கிறார்.
அமெரிக்க வங்கியின் சரிவைத் தொடர்ந்து, நிதி அமைச்சர் கனடாவின் வங்கி கட்டுப்பாட்டாளர், கனடிய மத்திய வங்கியின் தலைவர் ஆகியோரை சந்தித்தார்.
Californiaவை தளமாகக் கொண்ட Silicon Valley வங்கியை அமெரிக்க கட்டுப்பாட்டாளர் வெள்ளிக்கிழமை (10) மூடியதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
திங்கட்கிழமை (13) நிதியமைச்சர் Chrystia Freeland, நிதி நிறுவனங்களின் கண்காணிப்பாளரை சந்தித்தார்.
தேசிய, பிராந்திய கனேடிய நிதி நிறுவனங்களின் தலைவர்களுடனும் Freeland சந்திப்புகளை மேற்கொண்டார்.