தேசியம்
செய்திகள்

தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து விசாரிக்க புதிய சிறப்பு அறிக்கையாளர் நியமனம்

கடந்த பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களை விசாரிக்க பிரதமர் Justin Trudeau புதிய சிறப்பு அறிக்கையாளரை நியமிக்கின்றார்

திங்கட்கிழமை பிரதமர் இந்த அறிவித்தலை வெளியிட்டார்

கடந்த இரண்டுதேர்தல்களில் சீனாவின் தலையீடுகள் குறித்த கனேடியர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட புதிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நியமன அறிவித்தல் வெளியானது

இந்த சுயாதீன அதிகாரி இதுவரை நியமிக்கப்படவில்லை.

இவர் பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கவுள்ளார்.

அதேவேளை இந்த விவகாரத்தை NSICOP எனப்படும் தேசிய பாதுகாப்பு, உளவுத்துறை நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயர்மட்ட ரகசியக் குழுவின் கவனத்திற்கு பிரதமர் கொண்டு சென்றுள்ளார்.

கனேடிய புலனாய்வு அமைப்புகளால் இந்த விடயத்தில் ஆய்வு செய்தது குறித்து விசாரணை செய்யுமாறு NSIRA எனப்படும் தேசிய பாதுகாப்பு, புலனாய்வு மறுஆய்வு நிறுவனத்திடமும் பிரதமர் கோரியுள்ளார்

 

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

2022 வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை $52.8 பில்லியன்

போராட்டங்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்

Lankathas Pathmanathan

Leave a Comment