தேசியம்
செய்திகள்

வார இறுதியில் நடைபெறும் Ontario Liberal கட்சியின் வருடாந்த பொதுக்கூட்டம்

Ontario Liberal கட்சியின் தலைமைப் போட்டிக்கான முடிவு இந்த வார விடுமுறையில் எடுக்கப்படவுள்ளது.

Ontario Liberal கட்சியை புதுப்பிப்பதற்கான மற்றொரு முயற்சிக்காக இந்த வார இறுதியில் கட்சி உறுப்பினர்கள் கூடுகிறார்கள்.

Liberal கட்சியின் வருடாந்த பொதுக்கூட்டம் Hamilton நகரில் நடைபெறுகிறது.

20 ஆண்டுகளில் நடைபெறும் மிகப்பெரிய கட்சி கூட்டமாக இது அமையும் என கூறப்படுகிறது.

இதில் 1,500 கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பொதுக்கூட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் புதிய கட்சி நிர்வாகியை தேர்ந்தெடுப்பதுடன் பல அரசியலமைப்பு திருத்தங்களுக்கு வாக்களிக்க உள்ளனர்.

இதில் கட்சி தலைமையை தெரிவு செய்வதற்கு வாக்களிக்கும் முறை குறித்தும் முடிவு செய்யப்படவுள்ளது.

Liberal தலைமைப் போட்டிக்கான திகதி இதுவரை முடிவு செய்யப்படவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் அதிகரிக்கும் கனடிய மத்திய வங்கியின் வட்டி விகிதங்கள்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 23ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Toronto நகர முதல்வர் தேர்தலில் Olivia Chow!

Lankathas Pathmanathan

Leave a Comment