தேசியம்
செய்திகள்

நோய் அபாயத்தில் உள்ளவர்கள் booster தடுப்பூசியை  பெற வேண்டும்!

COVID காரணமாக கடுமையான நோய் அபாயத்தில் உள்ள கனடியர்கள் இலை துளிர் காலத்தில் கூடுதல் booster தடுப்பூசியை  பெற அறிவுறுத்தப்படுகின்றனர்.

NACI எனப்படும் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு இந்த அறிவுறுத்தலை வெளியிட்டது.

இதில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள், முதியோர், சிக்கலான மருத்துவ தேவைகள் உள்ளவர்களும் அடங்குகின்றனர்.

18 வயதிற்கு மேற்பட்டவர்கள், மருத்துவ சிகிச்சை அல்லது அடிப்படை சுகாதார நிலை காரணமாக, மிதமான  கடுமையான நோய் எதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள், இந்த தடுப்பூசியை  பெற வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

65 முதல்  79 வயதுக்குட்பட்டவர்களும் தடுப்பூசி போட வேண்டும் என NACI கூறுகிறது.

குறிப்பாக அவர்கள் COVID தொற்றால் பாதிக்கப்படாத நிலையில் இருந்தால் தடுப்பூசி பெற வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.

Related posts

தடுப்பூசி போடாத கனேடிய பார ஊர்தி ஓட்டுனர்கள் புதிய நடைமுறையின் கீழ் தனிமைப்படுத்தப்பட வேண்டும்

Lankathas Pathmanathan

தடுப்பூசி கடவுச்சீட்டை Quebec நடைமுறைபடுத்துகிறது !

Gaya Raja

Ontario கல்வி ஊழியர்கள் விரைவில் சட்டப்பூர்வ வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம்

Lankathas Pathmanathan

Leave a Comment