தேசியம்
செய்திகள்

மத்திய அரசாங்கத்துடன் சுகாதார பாதுகாப்பு நிதியுதவி தொடர்பாக British Columbia உடன்பாடு

British Columbia மாகாண அரசாங்கம், மத்திய அரசாங்கத்துடன் சுகாதார பாதுகாப்பு நிதியுதவி தொடர்பாக கொள்கை அளவில் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது.

பிரதமர் Justin Trudeau, British Columbia முதல்வர் David Eby இணைந்து புதன்கிழமை (01) இந்த அறிவித்தலை வெளியிட்டனர்.

மத்திய சுகாதார பரிமாற்றங்களில் $27.47 பில்லியனை இந்த உடன்பாடு உள்ளடக்கியுள்ளது.

இந்த உடன்படிக்கையில் அடுத்த 10 ஆண்டுகளில் $3.3 பில்லியன் புதிய பணத்தை British Columbia பெறுகின்றது.

இந்த ஒப்பந்தத்தில் ஒரு முறை கொடுப்பனவான $273 மில்லியன் கனடா சுகாதார பரிமாற்றமும் அடங்குகின்றது.

ஏற்கனவே மத்திய அரசாங்கம் ஏழு மாகாணங்களுடன் சுகாதார நிதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

நான்கு Atlantic மாகாணங்களுடனும், Manitoba, Ontario, Alberta ஆகியனவும் கொள்கை அடிப்படையில் சுகாதாரப் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் மத்திய அரசாங்கத்துடன் கையெழுத்திட்டுள்ளன.

Related posts

தனிமைப்படுத்தப்படும் பிரதமர் Trudeau!

Lankathas Pathmanathan

வேலையற்றோர் விகிதம் கடந்த மாதம் 5.3 சதவீதமாக பதிவானது

Saskatchewan சுய-தனிமை தேவைகளிலும் சோதனை விதிகளிலும் மாற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment