Ottawaவின் எதிர்ப்பு முற்றுகை போராட்டங்கள் பாதுகாப்பற்றவை, குழப்பமானவை என இன்று வெளியான விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Ottawa நகரின் மூன்று வார போராட்டம் ஒரு அமைதியான கொண்டாட்டம் எனவும், அது பலவந்தமான ஆக்கிரமிப்பு அல்ல எனவும் அமைப்பாளர்கள் வாதிட்டு வந்தனர்.
ஆனால் இந்த ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அவசர காலச் சட்டத்தின் உபயோகம் குறித்த விசாரணை அறிக்கையில் இந்த வாதம் நிராகரிக்கப்பட்டது.
இந்த போராட்டங்கள் சட்டப்பூர்வமானவை, அமைதியானவை, அல்லது கொண்டாட்டத்தை ஒத்தவை என்ற அமைப்பாளர்களின் விளக்கத்தை ஏற்கவில்லை என விசாரணை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
பல பங்கேற்பாளர்கள் அமைதியான போராட்டத்தை நடத்த விரும்பியதை அவர் ஒப்புக்கொண்டார்.