தேசியம்
செய்திகள்

சமாதானத்தை நோக்கிய பாதையில் கனடா உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்!

ரஷ்ய படையெடுப்பு காரணமாக பாலியல் வன்முறைகளை எதிர் கொண்டவர்களுக்கு உதவும் உக்ரேனிய அமைப்புகளுக்கு கனடிய அரசாங்கம் நிதி உதவியை அறிவித்துள்ளது.

கனடிய வெளியுறவு அமைச்சர் Mélanie Joly வியாழக்கிழமை (16) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

அமைச்சர் Mélanie Joly தனது இரண்டு நாள் உக்ரைன் பயணத்தை வியாழனன்று நிறைவு செய்தார்.

இந்த பயணத்தின் போது அமைச்சர் Mélanie Joly, உக்ரேன் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர், உயர்மட்ட வழக்கறிஞர் உள்பட பலரையும் சந்தித்து போர்க்குற்றங்களுக்கு ரஷ்யாவை பொறுப்புக்கூற வைக்கும் முயற்சிகள் குறித்து விவாதித்தார்.

இந்த சந்திப்புகளில் உக்ரைனை மீளக் கட்டியெழுப்புதல், கண்ணிவெடி அகற்றும் முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது

சமாதானத்தை நோக்கிய பாதையில் கனடா உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமைச்சர் Mélanie Joly இந்த சந்திப்புகளில் உறுதியளித்தார்.

Related posts

நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்கவில்லை: அமைச்சர் Chrystia Freeland

Lankathas Pathmanathan

போலி அடையாள அட்டைகளுடன் இருவர் கனேடிய எல்லையில் கைது!

Lankathas Pathmanathan

RCMP அதிகாரிகளைக் கொலை செய்ய சதி: குற்றவாளிக்கு பிணை மறுப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment