தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கு நான்கு டாங்கிகளை அனுப்பும் கனடா

கனடா உக்ரைனுக்கு நான்கு போர் டாங்கிகளை அனுப்புகிறது.

இந்த டாங்கிகளை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து உக்ரேனிய இராணுவத்தினருக்கு பயிற்சியளிக்க கனடிய ஆயுதப்படை உறுப்பினர்களையும் கனடா அனுப்பி வைக்க உள்ளது.

கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் வியாழக்கிழமை (26) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

எதிர்வரும் வாரங்களில் இந்த விநியோகம் நிகழவுள்ளது.

பயிற்சியாளர்கள், பாகங்கள், வெடிமருந்துகளை வழங்குதல் ஆகியவை நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைக்கப்படாமல் நிலுவையில் உள்ளன என பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

எதிர்காலத்தில் உக்ரைனுக்கு கனடா மேலதிகமாக டாங்கிகளை அனுப்பலாம் எனவும் அமைச்சர் ஆனந்த் கூறினார்.

Related posts

ஒரே நாளில் 27 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள்

Lankathas Pathmanathan

கனடிய தேர்தல்களில் இந்தியா, பாகிஸ்தான் தலையீடு?

Lankathas Pathmanathan

அடுத்த வாரம் வெளியாகும் COVID கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான Ontarioவின் புதிய திட்டம்!

Gaya Raja

Leave a Comment