தேசியம்
செய்திகள்

March இறுதிக்குள் Ontario வரவு செலவுத் திட்டம்

விரைவில் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் குடியிருப்பாளர்களின் கருத்துக்களை Ontario அரசாங்கம் கோருகிறது.

இந்த கருத்துக்களில் போக்குவரத்து, சுகாதார-பராமரிப்பு, வாழ்க்கைச் செலவு, வேலை வாய்ப்புகள கவனம் செலுத்தப்படுகிறது.

இணையம் மூலம் புதன்கிழமை (11) முதல் கருத்துக்கள் கோரப்படுகின்றன.

தவிரவும் சட்டமன்றக் குழு மாகாணம் முழுவதும் பயணம் மேற்கொண்டு பொது ஆலோசனை செயல்முறைகளை ஆரம்பிக்கிறது.

March மாதம் 31ஆம் திகதிக்குள் Ontario மாகாண வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

கடந்த November மாதம் வெளியிடப்பட்ட சமீபத்திய நிதிப் புதுப்பித்தலில், இந்த நிதியாண்டில் மாகாணம் 12.9 பில்லியன் டொலர் பற்றாக்குறையை கணித்துள்ளது.

Related posts

மளிகை தள்ளுபடி கொடுப்பனவுகளை CRA வழங்குகிறது!

Lankathas Pathmanathan

கனேடியர்கள் அனைவருக்கும் வழங்குவதற்கு போதுமான தடுப்பூசிகளை இந்த வாரம் கனடா பெற்றுக் கொள்ளும்!

Gaya Raja

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment