தேசியம்
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி மார்ச் மாதம் கனடாவிற்கு விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி Joe Biden, எதிர்வரும் மார்ச் மாதம் கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

2021 ஜனவரியில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் கனடாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

இந்த பயணம் குறித்த அறிவித்தல் இரு நாடுகளின் அதிகாரிகளால் இன்று உறுதிப்படுத்தப்பட்டது.

மெக்சிகோ நகரில் வட அமெரிக்கத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பிரதமர் Justin Trudeauவும், அமெரிக்க ஜனாதிபதி Bidenனும் செய்வாய்க்கிழமை (10) சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது Bidenனை கனடாவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு Trudeau அழைத்தார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகள் தங்கள் பதவிக் காலத்தின் ஆரம்பத்தில் கனடாவுக்கு பயணம் மேற்கொள்வது வழக்கமாகும்.

COVID பயணக் கட்டுப்பாடுகளால் ஜனாதிபதி Bidenனின் கனடாவுக்கான பயணம் தாமதமானது.

Related posts

மத்திய அரச ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்படும் தடுப்பூசி!

Gaya Raja

Toronto காவல்துறையினரால் இரண்டு தமிழர்கள் கைது

Lankathas Pathmanathan

Belarus விமானங்கள் கனடாவில் தரை இறங்குவதற்கு தடை

Leave a Comment