தேசியம்
செய்திகள்

Atlantic கனடாவை மீண்டும் தாக்கும் கடுமையான பனிப்புயல்

கிழக்கு Ontario, Quebec மாகாணங்களை தொடர்ந்து தாக்கி வரும் கடுமையான பனிப்புயல் இந்த வார இறுதியில் Atlantic கனடாவை நோக்கி நகர உள்ளது.

கிழக்கு Ontarioவில் வெள்ளிக்கிழமை (16) 15 முதல் 20 centimetre வரையிலான பனிப்பொழிவு பதிவானது.

சனிக்கிழமை (17) காலைக்குள் 20 முதல் 30 centimetres வரையிலான பனிப்பொழிவு Ottawaவில் பதிவாகும் என சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.

இந்த புயல் Quebecகிலும், Atlantic கனடாவிலும் கடுமையான பனிப்பொழிவை ஏற்படுத்தும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் நகர்ந்து வருகிறது.

Prairies மாகாணங்களில் 30 centimetre வரையிலான பனிப்பொழிவை இந்த புயல் ஏற்படுத்தியது.

Atlantic கனடாவில் இந்த வாரம் ஏற்கனவே 40 centimetres அளவிலான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

Related posts

கனடாவின் வேலையற்றோர் விகிதம் குறைந்தது

Lankathas Pathmanathan

கனடா முழுவதும் பல பகுதிகளில் Omicron ஆதிக்கம்!

Lankathas Pathmanathan

பயங்கரவாதக் குழுவின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் கனடியர் பிரித்தானியாவில் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment