பலாலி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதற்கு கனடிய தமிழர் பேரவை (CTC) வரவேற்பு தெரிவித்துள்ளது.
இந்த விமான நிலைய மீள் திறப்பு விழாவில் கனடிய தமிழர் பேரவையின் மனிதாபிமான திட்டங்களின் இணைப்பாளர் துஷ்யந்தன் துரைரட்ணம் கலந்து கொண்டார்.
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் திங்கட்கிழமை (12) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
அண்மையில் கனடிய தமிழர் பேரவை பத்து கோரிக்கைக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றை ஸ்ரீலங்கா அரசிடம் கையளித்திருந்தது.
அதில் பலாலி சர்வதேச விமான நிலைய மீள் திறப்பு கோரிக்கையும் உள்ளடங்கியிருந்தது.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் தமது ஏனைய கோரிக்கைகளை உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என கனடிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளது.