Albertaவில் செவ்வாய்கிழமை (29) பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம் இயற்கையாகவே பதிவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வடமேற்கு Albertaவில் செவ்வாயன்று பதிவான 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் குறைந்தது ஆறு கிலோ மீட்டர் நிலத்தடியில் உருவானது.
இந்த நில நடுக்கத்திற்கு முன்னதாக இரண்டு சிறிய நில நடுக்கங்களும், அதைத் தொடர்ந்து பல அதிர்வுகளும் ஏற்பட்டன.
இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என RCMP தெரிவித்துள்ளது.