December 12, 2024
தேசியம்
செய்திகள்

தேசிய நினைவு தின நிகழ்வுகளில் போரில் இறந்தவர்களை கனடியர்கள் நினைவு கூர்ந்தனர்

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற தேசிய நினைவு தின நிகழ்வுகளில் போரில் இறந்தவர்களை கனடியர்கள் நினைவு கூர்ந்தனர்.

வெள்ளிக்கிழமை (11) பிரதான நிகழ்வு Ottawaவில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் நடைபெற்றது.

2019ஆம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக இராணுவ உறுப்பினர்களும் கனேடிய ஆயுதப்படை உறுப்பினர்களும் தேசிய போர் நினைவிடத்தில் கூடினர்.

பிரதான நிகழ்வில் ஆளுநர் நாயகம் Mary Simon, படைவீரர் விவகார அமைச்சர்  Lawrence MacAulay, பாதுகாப்பு பணியாளர்களின் தலைவர் ஜெனரல் Wayne Eyre ஆகியோர் பங்கேற்றனர்.

Cambodia உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் Justin Trudeau நினைவு தின விழாவில் கலந்து கொள்ளவில்லை.

ஆனாலும் பிரதமரின் மனைவி Sophie Gregoire Trudeau  அவர்களது மூத்த புதல்வன் Xavier ஆகியோர் நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில்  பிரதமர் Trudeau படைவீரர்களை அவமதித்துள்ளார் என பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சி குற்றம் சாட்டியது.

கனேடியர்கள் படைவீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்த வேளையில் வெளிநாட்டுப் பிரமுகர்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு Cambodiaவில் நடந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் முன்னுரிமை அளித்துள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களிலும் நகரங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் நடைபெற்றன.

Related posts

கானாவில் கனடியர்களை கடத்திய நால்வருக்கு சிறைத் தண்டனை

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

தேர்தல் நடவடிக்கைகளுக்கு COVID தடையாக இருக்காது: கனடிய தேர்தல் திணைக்களம் உறுதி

Gaya Raja

Leave a Comment