உட்புற கட்டமைப்புகளில் முகக் கவசங்களை அணியுமாறு மத்திய சுகாதார அதிகாரிகள் கனடியர்களை ஊக்குவிக்கின்றனர்.
உட்புற கட்டமைப்புகளில் முகக் கவசங்களை அணிவதுடன் ஏனைய பொது சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடருமாறும் மத்திய சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
வியாழக்கிழமை (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
இலையுதிர் காலத்தில் COVID தொற்றின் பரவலை குறைக்க இந்த நடைமுறைகள் அவசியம் எனவும் அவர் கூறினார்.
இதுவரை காலமும் COVID தடுப்பூசிகளை பெறாதவர்கள் அவற்றை பெற வேண்டியது அவசியம் என Dr. Tam தெரிவித்தார்.
முகக் கவச கட்டுப்பாடுகளை மாகாண அதிகாரிகள் முடிவு செய்யலாம் எனவும் Tam கூறினார்.
Ontario, Manitoba ஆகிய மாகாணங்களில் உள்ள சில மருத்துவர்கள் மீண்டும் முகக்கவச கட்டுப்பாடுகளை
அமுல்படுத்துமாறு கோருகின்றனர்.
அதிகரித்து வரும் COVID தொற்றின் பரவல் மத்தியில், Ontario வாசிகள் முகக் கவசங்களை அணிய வேண்டும் என புதன்கிழமை (09) முதல்வர் Doug Ford தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
October 9 ஆம் திகதி வரை 49.6 சதவீதமானவர்கள் மாத்திரமே ஒரு booster தடுப்பூசியை பெற்றுள்ளதாக கனடிய அரசாங்கத்தின் தரவுகள் சுட்டிக் காட்டுகிறது.
அதேவேளை 14.3 சதவீதமானவர்கள் மாத்திரமே இரண்டு booster தடுப்பூசியை பெற்றுள்ளனர்.