தேசியம்
செய்திகள்

Ontarioவில் பாடசாலைகள் மூடப்படுவதற்கு Ford அரசாங்கமே காரணமென 62 சதவீதம் பேர் கருத்து

Ontario கல்வித் தொழிலாளர்களின் வேலை நிறுத்த நடவடிக்கைக்கு Doug Ford அரசாங்கத்தை 10 பேரில் 6 பேர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை (06) முன்னெடுக்கப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில் இந்த தரவு வெளியானது.

CUPE உறுப்பினர்கள் நான்கு வருட ஒப்பந்தம், வேலை நிறுத்தத்தை தடை செய்யும் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வேலையை விட்டு வெளியேறிய நிலையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் இந்த கருத்து கணிப்பு பதிவானது

இந்த கருத்துக் கணிப்பின்படி, Ontario வாசிகளில் 62 சதவீதம் பேர் வேலை நிறுத்த நடவடிக்கையால் பாடசாலைகள் மூடப்படுவதற்கு Progressive Conservative அரசாங்கமே காரணம் என நம்புகின்றனர்.

இந்த எண்ணிக்கை பாடசாலை வயது குழந்தைகளின் பெற்றோர்களிடையே அதிகரிக்கிறது.

அவர்களில் 68 சதவீதம் பேர் Ford இன் PC அரசாங்கம் தற்போதைய நிலைமைக்கு காரணம் என கூறியுள்ளனர்.

Notwithstanding விதியின் பயன்பாட்டை, 50 சதவீதம் பேர் மோசமான யோசனை எனவும் கூறும் அதேவேளை 36 சதவீதமானவர்கள் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

Related posts

Tel Aviv விமான சேவையை தற்காலிகமாக இரத்து செய்யும் Air கனடா

Lankathas Pathmanathan

கனடாவின் மக்கள் தொகை 2068இல் 57 மில்லியனாக அதிகரிக்கலாம்

Lankathas Pathmanathan

கனடிய இளையோர் hockey அணி உறுப்பினர்கள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள்?

Lankathas Pathmanathan

Leave a Comment