December 12, 2024
தேசியம்
செய்திகள்

தென்கொரியா கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களில் கனடியரும் ஒருவர்

தென் கொரியாவில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களில் கனடியர் ஒருவரும் அடங்குகிறார்.

கனடிய விவகார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (30) இதனை உறுதிப்படுத்தியது.

கனேடிய அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மேலும் தகவல்களை சேகரிக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூதரக உதவிகளை வழங்கவும் தயாராக உள்ளதாக மத்திய அமைச்சு தெரிவித்துள்ளது.

தகவல்களை தனியுரிமை காரணமாக காயமடைந்த நபர் குறித்த மேலதிக விவரங்களை வெளியிட முடியாது என அமைச்சு கூறியுள்ளது.

இந்த நிலையில் தென்கொரியாவில் ஏற்பட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் Justin Trudeau இரங்கல் தெரிவித்தார்.

இந்த பேரழிவால் அதிர்ச்சியடைந்துள்ளதாக கொரிய கனேடியர்கள் தெரிவித்தனர்.

Related posts

Toronto Pride கொண்டாட்டத்தில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு சில தினங்கள் எடுக்கலாம்: தேர்தல் திணைக்களம்!

Gaya Raja

Nova Scotia மாகாண தேர்தலில் Progressive Conservative வெற்றி

Lankathas Pathmanathan

Leave a Comment