தேசியம்
செய்திகள்

நகரசபை தேர்தலில் நான்கு தமிழர்கள் வெற்றி

Ontario மாகாணத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற நகரசபை தேர்தலில் நான்கு தமிழர்கள் வெற்றி பெற்றனர்.

Markham நகரின் ஏழாவது வட்டாரத்தின் நகர சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ஜுவானிடா நாதன் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் Markham நகரின் ஏழாவது வட்டாரத்திற்கு மீண்டும் தமிழ் நகரசபை உறுப்பினர் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.

தவிரவும் Toronto கல்விச் சபை உறுப்பினர் பதவிக்கு மூன்று தமிழர்கள் தெரிவாகியுள்ளனர்.

Scarborough North தொகுதியில் கல்விச் சபை உறுப்பினராக மீண்டும் யாழினி ராஜகுலசிங்கம் வெற்றி பெற்றார்.

Scarborough-Agincourt தொகுதியில் கல்விச் சபை உறுப்பினராக அனு ஸ்ரீஸ்கந்தராஜா வெற்றி பெற்றார்.

இவர்கள் இருவரும் தொடர்ந்து இரண்டாவது தடவையாக தமது பதவிகளை வெற்றி பெறுகின்றனர்.

Scarborough Center தொகுதியில் கல்விச் சபை உறுப்பினராக நீதன் சான் வெற்றி பெற்றார்.

இவர் முன்னர் Toronto நகரசபை உறுப்பினராகவும், York பிராந்தியத்தின் கல்விச் சபை உறுப்பினராகவும் இருந்தவராவார்.

இவர்கள் நால்வர் தவிர இந்த தேர்தலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர்.

Related posts

பயண சோதனைச் சாவடிகளை அமைப்பது குறித்து Quebec மாகாண  அரசாங்கம் ஆலோசனை

Lankathas Pathmanathan

தேவை ஏற்பட்டால் மேலும் வட்டி வீத அதிகரிப்பு குறித்து மத்திய வங்கி பரிசீலிக்கும்

Lankathas Pathmanathan

Latviaவிற்கு மேலும் துருப்புக்களை அனுப்ப கனடா உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment