புதன்கிழமை (12) Torontoவை கடுமையான காற்று தாக்கும் என சுற்றுச்சூழல் கனடா எதிர்வு கூறியுள்ளது.
இது குறித்த விசேட வானிலை அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
புதன் பிற்பகல் மணிக்கு 70 முதல் 90 km வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.
மழை அல்லது இடியுடன் கூடிய மழை புதன் மாலை பெய்யும் எனவும் தொடர்ந்தும் பலமான காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.