தேசியம்
செய்திகள்

North York கத்திக் குத்துச் சம்பவத்தில் தமிழர் பலி

தமிழர் ஒருவர் பலியான North York கத்திக் குத்துச் சம்பவத்தில் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை (20) இரவு நிகழ்ந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 22 வயது இளைஞன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

புதன்கிழமை (21) வெளியான காவல்துறை செய்தி குறிப்பில், Jane Street and Finch Avenue West சந்திப்புக்கு அருகாமையில் இரவு 10:18 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பலியான தமிழர் 24 வயதான Newscastle, Ontarioவை சேர்ந்த ஆண் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவரது மரணம் இந்த வருடத்தில் Torontoவில் நடந்த 49வது கொலையாகும்.

இவரது பெயர் விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக காவல்துறையினரால் வெளியிடப்படவில்லை.

இதில் Torontoவைச் சேர்ந்த 22 வயதான Haroon Imran என்பவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

புதன்கிழமை (21) மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இதுவரை நிருபிக்கப்படவில்லை.

இந்த சம்பவத்தில் 25 வயதுடைய ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது அவர் நலமுடன் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

Related posts

January மாதம் உயர்ந்தது வருடாந்த பணவீக்கம்

Lankathas Pathmanathan

குறைவடையும் கனடாவின் தடுப்பூசிகளுக்கான தேவை!

Gaya Raja

Toronto Maple Leafs பொது மேலாளர் பதவியில் இருந்து வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment