கட்சி தலைமை போட்டி இடை நிறுத்தப்பட்டால், கட்சியை விட்டு வெளியேறப் போவதாக பசுமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.
தலைமைப் போட்டி இடை நிறுத்தப்பட்டால், கட்சியை விட்டு வெளியேறி சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்படவுள்ளதாக இரணடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.
கட்சியின் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
இந்த நிலைமையைத் தீர்க்க கட்சிக்குள் உரையாடல்கள் தொடர்வதாக பசுமைக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திங்கட்கிழமை (12) கூறினார்.