December 12, 2024
தேசியம்
செய்திகள்

முகக்கவச கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் பல்கலைக்கழகங்கள்

மாகாண அரசாங்கங்களின் சுகாதார உத்தரவுகளை தாண்டியும் கனடா முழுவதும் உள்ள சில பல்கலைக்கழகங்கள் முகக்கவச கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துகின்றன.

மாகாண, பிராந்திய அரசுகளின் முகக்கவச கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள போதிலும், ஊழியர்கள், மாணவர்களின் பாதுகாப்பிற்காக அவற்றை தொடர்ந்தும் நடைமுறையில் வைத்திருக்க கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் சில முடிவு செய்துள்ளன.

மாணவர்களும் பணியாளர்களும் பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் முகக்கவச கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என நாடளாவிய ரீதியில் 83 பல்கலைக்கழகங்களில் பதினான்கு கூறியுள்ளது.

London, Ontarioவி்ல் உள்ள Western பல்கலைக்கழகம், அதனுடன் இணைந்த Huron கல்லூரி ஆகியவை தொடர்ந்தும் தடுப்பூசி கட்டுப்பாடுகளை அமுல்படுத்துகின்றன.

Related posts

Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் 18 வயது இளைஞர்

காசாவில் கனடியர்கள் காணாமல் போயுள்ளது குறித்து  இஸ்ரேலிய – கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் உரையாடல்

Lankathas Pathmanathan

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் தமிழர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment