தேசியம்
செய்திகள்

Quebec முதியவர்களுக்கு இரண்டாவது booster தடுப்பூசிகள் வழங்கல்

Quebec மாகாணம் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் முதியவர்களுக்காக COVID booster தடுப்பூசிகளை வழங்க ஆரம்பித்துள்ளது.

நீண்ட கால பராமரிப்பு இல்லங்கள், தனியார் முதியோர் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு ஐந்தாவது COVID தடுப்பூசியை வழங்க Quebec  ஆரம்பித்துள்ளது.

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் இலையுதிர் காலத்தில் நோய்த் தொற்றுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த நகர்வை Quebec முன்னெடுக்கிறது.
தடுப்பூசிகளுக்கு இடையே பரிந்துரைக்கப்பட்ட இடைவெளி குறைந்தது ஐந்து மாதங்கள் என Quebec மாகாண சுகாதாரத் துறை கூறுகிறது
இந்த நிலையில்  மக்கள் நெரிசலான இடங்களில் முகமூடிகளை அணிவதைத் தொடர வேண்டும் என Quebec பொது சுகாதார இயக்குனர் Dr. Luc Boileau கூறினார்.
COVID காரணமாக 3,457 சுகாதாரப் பணியாளர்கள் வேலையில் இருந்து விலகியுள்ளதாக Quebec சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீவிர சிகிச்சையில் உள்ள 55 பேர் உட்பட 1,993 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related posts

Paris Paralympics: Tokyo Paralympics போட்டியை விட அதிகம் பதக்கங்கள் வென்றது கனடா

Lankathas Pathmanathan

அனுமதி மறுக்கப்பட்ட ரஷ்ய பிரஜைகள் கனடாவுக்குள் நுழைவதை தடை செய்ய நடவடிக்கை

மோசமான காற்றின் தரம் வார இறுதி வரை நீடிக்கும்

Lankathas Pathmanathan

Leave a Comment