தேசியம்
செய்திகள்

குரங்கம்மை தொற்றை பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கும் திட்டம் இல்லை: Dr. Theresa Tam

குரங்கம்மை தொற்றை பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கும் திட்டம் தற்போது இல்லை என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam கூறினார்.

உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கா ஆகியன அண்மையில் குரங்கம்மை தொற்றை பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்தன.

ஆனாலும் கனடாவில் இதனை ஒரு பொது சுகாதார அவசர நிலையாக அறிவிப்பதில் நன்மை இல்லை என Tam கூறினார்.

கனடாவின் பிராந்திய, மாகாண பொது சுகாதார அதிகாரிகளின் கட்டமைப்பை அதற்கான காரணமாக அவர் சுட்டிக் காட்டினார்.

அவசரகால அறிவிப்பு அவசரகாலச் சட்டத்தை உள்ளடக்கியதாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

ஏற்கனவே குரங்கம்மை தொற்றை எதிர்கொள்வதற்கு கனடா நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் Tam குறிப்பிட்டார்.

கனடாவில் இதுவரை 1,059 குரங்கம்மை தொற்றுகள் பதிவாகியுள்ளன.

Related posts

Ottawaவில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மீது தாக்குதல்!

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீடுகள் குறித்து பிரதமருக்கு 2021 முதல் ஐந்து முறை விளக்கம்

Lankathas Pathmanathan

முஸ்லீம் குடும்பத்தினர் மீது பயங்கரவாத தாக்குதல்? – நால்வர் பலி!

Gaya Raja

Leave a Comment